13ஆவது சீர்­தி­ருத்­தத்தை இல்­லா­தொ­ழித்து மாவட்ட நிர்­வா­க­சபை முறை­மைக்கு முயற்சி!! -திட்ட யோசனை இந்­தி­யா­வி­டமும் கைய­ளிப்பு

இலங்கை அர­சி­ய­ல­மைப்பில் காணப்­ப­டு­கின்ற 13 ஆவது அர­சி­ய­ல­மைப்பு திருத்­தத்தை இல்­லா­தொ­ழித்து மாவட்ட நிர்­வாக சபை முறை­மை­யு­ட­னான கட்­ட­மைப்பை உரு­வாக்­கு­வது தொடர்பில் தேசிய அர­சாங்கம் அவ­தானம் செலுத்­தி­யுள்­ளது.

இதற்கு அமை­வான திட்ட யோச­னையை வெளி­வி­வ­கார இரா­ஜாங்க அமைச்சர் வசந்த சேனா­நா­யக்க பாரா­ளு­மன்­றத்தில் அனைத்து அரசியல் கட்­சி­களின் தலை­வர்­க­ளுக்கும் கைய­ளித்­துள்ளார்.

மேலும் ஜனா­தி­பதி மற்றும் பிர­த­ம­ருக்கும் இத்­திட்ட யோசனை கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது.1987 ஆம் ஆண்டு தேசிய இனப்­பி­ரச்­சி­னையை மையப்­ப­டுத்தி இந்­தியா 13 ஆவது அர­சி­ய­ல­மைப்பு திருத்­தத்தின் ஊடாக மாகா­ண­சபை முறை­மையை இலங்­கைக்கு அறி­முகம் செய்­தது.

அப்­போ­தைய ஆட்சி அதி­கா­ரத்­தி­லி­ருந்த ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­வரும் ஜனா­தி­ப­தி­யு­மான ஜே.ஆர்.ஜய­வர்­தன மற்றும் அப்­போ­தைய இந்­தியப் பிர­தமர் ராஜீவ்­காந்தி ஆகியோர் இந்த ஒப்­பந்­தத்தில் கைச்­சாத்­திட்­டனர்.

ஐக்­கிய தேசியக் கட்­சியின் உறுப்­பி­னரும் வெளி­வி­வ­கார இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான வசந்த சேனா­நா­யக்க 13 ஆவது அரசியலமைப்பினை முழு­மை­யாக மறு­சீ­ர­மைக்கும் வகையில் மாவட்ட நிர்­வாக சபை முறை­மையை முன்­வைத்­துள்­ள­துடன் அந்த திட்­டத்­தினை இந்தி­யா­வி­டமும் கைய­ளித்­துள்ளார்.

இலங்­கைக்­கான இந்­திய உயர்ஸ்­தா­னிகர் தரன்ஜித் சிங் சந்­து­விடம் கைய­ளித்­துள்­ள­தாக இரா­ஜாங்க அமைச்சர் தெரி­வித்தார்.

ஐக்­கிய தேசியக் கட்சி ஆட்சி காலத்தில் கொண்டு வரப்­பட்ட மாகா­ண­சபை முறை­மையை இரத்து செய்து புதிய திட்­ட­மொன்­றி­னூ­டாக தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வை எட்­டு­வ­தற்கு இந்­தி­யா­விடம் ஆலோ­சனை கேட்கும் வகையில் அர­சாங்கம் செயற்­பட்­டுள்­ளது.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் கடந்த வியாழக்கிழமை பிற்பகல் 4 மணிக்கு பாராளுமன்ற குழு அறையில் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்திலும் பிரஸ்தாபித்து இந்தியாவிடம் 13 ஆவது திருத்தச் சட்டத்தை இல்லாதொழிப்பது குறித்து ஆலோசனை கேட்டுள்ளது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like