10 ஆண்டுகளுக்கு பின்பு மாவீரர் துயிலுமில்லத்தை தேடி சென்ற சிங்கள மக்கள்!

மாவீரர் துயிலுமில்லத்தை சிங்கள மக்கள் தேடி சென்று பார்த்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் நேற்றைய தினம் (11.08.2018) இடம்பெற்றுள்ளது.

மன்னார் மடு பெரியபண்டிவிரிச்சான் பகுதியில் கடந்த போராட்ட காலங்களில் விடுதலைப்புலி இயக்கத்தில் இருந்து மரணமடைந்த முன்னாள் போராளிகளை புதைத்த இடத்தை, (மாவீரர் துயிலும் இல்லம்) தற்போது அழிவடைந்த நிலையில் காணப்படும் துயிலுமில்ல வளாகத்தை பார்வையிட்டு சென்றுள்ளனர்.

மடுவில் இம்மாதம் இடம்பெறவுள்ள மடு தேவாலயத்தின் ஆவணி உற்சவத்தை முன்னிட்டு ஏராளமான சிங்கள பக்தர்கள் வருகை தந்துள்ள நிலையிலேயே சிலர் குறித்த துயிலுமில்லத்தை பார்வையிட்டு சென்றுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடங்களிலும் மடு தேவாலயத்துக்கு வந்த சிங்கள மக்கள் குறித்த துயிலுமில்லத்தை பார்வையிட்டு சென்றமை குறிப்பிடத்தக்கது.