வீடு திரும்பியவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி! வவுனியாவில் சம்பவம்

வுனியா கற்பகபுரம் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் 9 வயது சிறுவனின் சடலம் ஒன்று மீட்கபட்டுள்ளது.

நேற்றையதினம் குறித்த சிறுவன் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தாய் மற்றும் சிறிய தந்தை ஆகியோர் தொழிலுக்கு சென்றுள்ளனர். வீட்டில் குறித்த சிறுவன் தனிமையில் இருந்துள்ளார். அவனது 3 வயதான சகோதரன் அயல் வீட்டில் இருந்துள்ளார்.

வேலை முடிந்ததும் மாலை 6 மணியளவில் வீட்டிற்கு சென்ற சிறிய தந்தை இளைய மகனை அழைத்து கொண்டு வீட்டிற்கு சென்ற சமயத்தில் மற்றைய மகனை காணவில்லை என தேடியுள்ளார்.

இந் நிலையில் வீட்டிற்கு அருகில் பயன்படாத நிலையில் உள்ள ஆட்டு கொட்டிலில் தூக்கில் தொங்கிய படி இருந்த சிறுவனை அவனது சகோதரன் அவதானித்து தந்தைக்கு தெரியப்படுத்தியுள்ளான்.

பின்னர் சடலம் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டது. சம்பவத்தில் பானுசன் என்ற 9 வயது சிறுவனே மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

குறித்த சிறுவனின் சிறியதந்தை கூறும் பொழுது தூக்கில் தொங்கும் அளவுக்கு எனது மகனிற்கு போதிய விளக்கம் இல்லை, அதற்கான தேவையும் இருக்கவில்லை இந்த கொடிய செயல் திட்டமிட்டு செய்யப்பட்டதாக கூறினார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் சடலம் இன்றையதினம் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like