கடற்படை வீரர் செய்த இரக்கமற்ற செயல்!கலங்கவைக்கும் புகைப்படம்

மனிதத்துவம் மிக்க நாடுகளின் பட்டியலில் இலங்கையும் ஓர் இடத்தினை தக்க வைத்துள்ளது.

என்றாலும் இன்றைய நிலையில் அந்த பட்டியலில் இலங்கை காணாமல் போய்விடக் கூடிய சாத்தியக் கூறு ஏற்பட்டு விடுமோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக விமர்சிக்கப்படுகின்றது.

இலங்கை கடற்படையைச் சேர்ந்த ஒருவர் நாய் ஒன்றினைப் பிடித்து அதனை உயிருடன் கடலில் வீசும் புகைப்படங்கள் வெளியானதன் காரணமாகவே இவ்வாறான விமர்சனங்கள் எழுப்பப்பட்டுள்ளது.

குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றதோடு, மனிதம் அற்ற இவ்வாறான செயல்கள் கண்டிக்கப்படத்தக்கவை எனவும் கூறப்படுகின்றது.

அண்மையில் மீதொட்டமுல்ல குப்பைமேடு அனர்த்தத்தில் புதைந்த தன் எஜமானருக்காக நாற்கணக்கில் நாய் ஒன்று காத்திருக்கும் புகைப்படம் வெளியாகி இருந்தது.

ஆனால் இன்று உயிருடன் நாயை கடலில் வீசும் இலங்கையரின் புகைப்படங்கள் வெளிவந்துள்ளன.

இவை (சில) மனிதர்கள் நாயை விடவும் தாழ்ந்து நடந்து கொள்வதை காட்டுவதாக கூறப்படுகின்றது.

இவ்வாறான இரக்கமற்ற செயல்களில் ஈடுபடுவோர் மிருக வதைக் குற்றச்சாட்டில் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் எனவும் பல்வேறு கருத்துகள் கூறப்படுகின்றது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like