யாழில் 82 வயது மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம்…!!

யாழ்ப்பாணம், உடுவில் பகுதியில் மூதாட்டி ஒருவரின் வீட்டில் பல லட்சம் ரூபாய் பெறுமதியான நகை மற்றும் பணம் திருட்டு போயுள்ளதாக

சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நேற்றுமுன் தினம் இரவு இரண்டு மணியளவில் வீட்டின் கூரையைப் பிரித்து உள் நுழைந்த திருடர்கள் வீட்டில் இருந்த நகை, பணம், தொலைபேசி என்பவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

82 வயது மதிக்க தக்க மூதாட்டியும் அவரது சகோதரியும் வீட்டில் உறக்கத்தில் இருந்த வேளை இந்த திருட்டு நடைபெற்றுள்ளது.

கிட்டத்தட்ட 8 லட்சம் ரூபாய் பெறுமையாக நகை மற்றும் பணம் திருட்டு போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Get real time updates directly on you device, subscribe now.