இலங்கை வரலாற்றில் முதல் முறையாக ரூபாய் பெறுமதிக்கு ஏற்பட்டுள்ள நிலை…!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் மீண்டும் சரிவு ஏற்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கி இதனை தெரிவித்துள்ளது.

அந்த வகையில் அமெரிக்க டொலர் ஒன்றிற்கான இலங்கை ரூபாவின் விற்பனை பெறுமதி இன்று 172.34 ரூபாவாக வீழ்ச்சியடைந்துள்ளதென மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இலங்கை வரலாற்றில் ரூபாய் பெறுமதி இந்த அளவிற்கு வீழ்ச்சியடைந்த முதல் சந்தர்ப்பம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.