யாழ்ப்பாணத்தை உலுக்கிய தாயின் கொலை! பொலிஸார் வெளியிட்ட தகவல்

யாழ்ப்பாணம் ஊரெழுவில் நேற்று இரவு(14.10.2018) இனந்தெரியாதவர்கள் மேற்கொண்ட தாக்குதலில், தாயொருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் ஊரெழு மேற்கில் மகனைத் தாக்க வந்தவர்களைத் தடுக்க முற்பட்ட தாயை, இனந்தெரியாத கும்பல் தாக்கியதில் தாயார் உயிரிழந்தார்.

இந்த நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் இன்று காலை கோப்பாய் பொலிஸாரின் சிறப்பு அணியினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊரெழு மேற்கு சரஸ்வதி சனசமூக நிலையத்திற்கு அண்மையில் நேற்றிரவு 8 மணியளவில் சம்பவம் இடம்பெற்றது.

வீட்டுக்குள் புகுந்த 8 பேர் கொண்ட கும்பல் ஒன்று இந்தக் கொலையைச் செய்தது எனவும், சம்பவத்தில் 54 வயதுடைய குடும்பப் பெண் கொலை செய்யப்பட்டார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடரில் கொல்லப்பட்டவரின் மகன் அளித்துள்ள வாக்குமூலத்தின்படி,

“நேற்று வீதியில் சென்ற என்னுடன் சிலர் முரண்பட்டுக் கொண்டனர். அவர்கள் மேலும் சிலருடன் 8 பேராக எனது வீட்டுக்கு வந்தனர். அவர்கள் மோட்டார் சைக்கிள், துவிச்சக்கர வண்டிகளில் வந்தனர். கையில் பொல்லுகள் மற்றும் கம்பிகளுடன் வந்த அவர்கள் என்னைத் தாக்கினார்கள். அவர்கள் என்னைத் தாக்குவதை அம்மா தடுத்தார். அப்போது அம்மாவின் தலையில் பொல்லு மற்றும் கம்பியால் அவர்கள் தாக்கினார்கள். அம்மா என் முன்னிலையில் துடிதுடித்து உயிரிழந்தார்’ என்று தெரிவித்துள்ளார்.