இலங்கையில் எரிபொருளுக்கான தட்டுப்பாடு?ஏரிபொருள் நிரப்பு நிலையத்தில் அலைமோதும் மக்கள்

அடுத்துவரும் சில தினங்களில் இலங்கையில் எரிபொருளுக்கான தட்டுப்பாடு ஏற்படலாம் என மசகு எண்ணெய் சார் தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன.

மசகு எண்ணெய் சார் தொழிற்சங்க ஒன்றியத்தினால் இன்று நள்ளிரவு முதல் ஆரம்பிக்கப்படவுள்ள தொழிற்சங்க நடவடிக்கையினால் இந்த தட்டுப்பாடு ஏற்படலாம் என தொழிற்சங்க ஒன்றியத்தின் இணைப்பாளர் பந்துல சமன் குமார குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய நிலையில் எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் வசமுள்ள எரிபொருளின் அளவு பெரும் அளவில் குறைவடைந்துள்ளதாகவும் அவர் கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் குறிப்பிட்டார்.

இலங்கைக்கு சொந்தமான எரிபொருள் தாங்கிகள் இந்தியாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக கூறி இந்த தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து ஏரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் மக்கள் அதிகமாக காணபடுகின்றனர்

Get real time updates directly on you device, subscribe now.

You might also like