இன்று நள்ளிரவு கலைக்கப்படும் இலங்கை நாடாளுமன்றம்? மைத்திரி போடும் புது திட்டம்

இன்று நள்ளிரவு இலங்கை நாடாளுமன்றத்தை கலைக்க வாய்ப்புள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்றத்தில் மைத்திரி அரசாங்கத்திற்கு பெரும்பான்மையை நிரூபிப்பதில் ஏற்பட்டுள்ள நெருக்கடியால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாடாளுமன்றம் இன்று நள்ளிரவு கலைக்கப்படுவதற்கான வாய்ப்பு 90 சதவீதம் உள்ளதாககுறித்த தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.

19ஆம் அரசியல் திருத்தச் சட்டத்தின் படி நாடாளுமன்றத்தை ஜனாதிபதியால் கலைக்கமுடியாது.

அப்படி கலைப்பது என்றால் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்க வேண்டும்.

இவ்வாறில்லாமல் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் உயர் நீதிமன்றத்தை அனுக வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம்.

எனினும் உயர் நீதிமன்றம் ஜனாதிபதியின் அதிகாரங்களுக்கு உட்பட்டு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது சரியென தீர்ப்பு வழங்க சட்ட விதிகளின் அடிப்படையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைப்பதற்காக சட்ட வல்லுனர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தப்பட்டுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.