யாழ்ப்பாணத்தை சேர்ந்த பல்கலை மாணவர்கள் மூவர் பலி!

பலாங்கொட பஹன் குடா நீர் வீழ்ச்சியில் மூழ்கி மூன்று பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இவர்கள் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த செல்வரட்ணம் திசான் (வயது-25), சரவணபவன் கோபிசன் (வயது-23) மற்றும் கோபாலகிருஷ்ணன் சாரங்கன் (வயது-25) ஆகிய மூவருமே உயிரிழந்தனர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like