முடிந்தால் இதை செய்து காட்டுங்கள்! மைத்திரி – மகிந்தவிற்கு சவால் விடுத்துள்ள ரணில்

நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ள பிரேரணையை சவாலுக்கு உட்படுத்துவதாக இருந்தால், முடிந்தால் நாடாளுமன்றில் நாளை பெரும்பான்மையை நிரூபித்து காட்டுமாறு மைத்திரி – மகிந்த தரப்பினர்களுக்கு ரணில் விக்ரமசிங்க சவால் விடுத்துள்ளார்.

இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட ரணில் விக்ரமசிங்க,

“மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக 122 பேர் வாக்களித்துள்ளனர். இதனால் மகிந்த ராஜபக்வின் அரசாங்கத்தின் மீது நம்பிக்கையின்மை ஏற்பட்டுள்ளது.

அரசியல் அமைப்பின் 42வது சரத்திற்கு அமைய அந்த அரசாங்கத்திற்கு பெரும்பான்மையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமரை பதவி நீக்கியமை, புதிய பிரதமரை நியமித்தை தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல்கள் சட்டத்திற்கு புறம்பானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களின் ஆணையை பெற்றுக்கொள்ளும் வாக்கெடுப்பு ஒன்றே இன்று நடத்தப்பட்டது. இது மக்களின் ஆணைக்கு கிடைத்துள்ள மாபெரும் வெற்றியாகும்” என அவர் மேலும் கூறியுள்ளார்.