ஆசிரிய வெற்றிடத்தை நிரப்ப நேர்முகத் தேர்வு!!

ஆசிரிய வெற்றிடத்தை நிரப்ப நேர்முகத் தேர்வு!!

வட மாகாண கல்வி அமைச்­சின் கீழ் உள்ள பாட­சா­லை­க­ளில் உள்ள கணித, விஞ்­ஞா­னப் பாடங்­க­ளின் ஆசி­ரிய வெற்­றி­டங்­க­ளுக்கு விண்­ணப்பித்த பட்­ட­தா­ரி­க­ளுக்கு எதிர் வ­ரும் 25ஆம், 26ஆம் திக­தி­க­ளில் நேர்­மு­கத் தேர்­வு­கள் நடத்­தப்­ப­ட­வுள்­ளன என்று வடக்கு மாகாண கல்வி அமைச்­சின் செய­லா­ளர் இ.இர­வீந்­தி­ரன் தெரி­வித்­தார்.அவர் தெரி­வித்­த­தா­வது,
வடக்கு மாகா­ணப் பாட­சா­லை­ க­ளில் நில­வும் கணி­தம் மற்­றும் விஞ்­ஞா­ன பாடங்­க­ளுக்­கான ஆசி­ரி­யர் வெற்­றி­டம் தொடர்­பான விவ­ரங்­கள் திரட்­டப்­பட்­டன. 418 வெற்­றி­டங்­கள் இருப்­பது கண்­ட­றி­யப்­பட்­டது.
அவற்றை நிரப்­பு­வ­தற்­கான அனு­ம­தி மத்­திய அர­சி­டம் கோரப்­பட்டது. மத்­திய அரசு அனு­மதி வழங்­கி­யது. கடந்த பெப்­ர­வரி மாதம் ஒரு மாத கால அவ­கா­சத்தில் விண்­ணப்­பங்­கள் கோரப்­பட்­டன. 284 விண்­ணப்­பங்­கள் மட்­டுமே கிடைத்­தன. வெற்­றி­டம் அதி­க­மாகக் காணப்­பட்­ட­தால் பட்­ட­தா­ரி­க­ளுக்குச் சந்­தர்ப்­பம் அளிக்­கும் வகை­யில் விண்­ணப்­பிக்­கும் காலத்தை நீடித்­தோம்.
விண்­ணப்­பிக்­கும் சந்­தர்ப்­பம் அளிக் கப்­பட்டு மீண்­டும் விளம்­ப­ரம் பிர­சு­ரிக்­கப் பட்­டது. இந்­தக் காலத்­தில் மேலும் 68 விண்­ணப்­பங்­கள் கிடைத்­துள்­ளன. மொத்­த­மாக தற்­போது 352 பட்­டத்­தா­ரி­கள் விண்­ணப்­பித்­துள்­ள­னர். எமது மாகா­ணத்துக்குத் தேவை­யான எண்­ணிக்­கை­யை அடைய 66 விண்­ணப்­பங்­கள் குறை­வா­கவே காணப்ப­டு­கின்­றன.
குறைந்­த­ள­வா­னோர் விண்­ணப் பித்­த­மை­யால் போட்­டிப் பரீட்­சை­யின்றி நேர­டி­யா­கவே நேர்­மு­கத் தேர்வு நடத்­து­வ­தற்கு எண்­ணி­யுள்ளோம். நேர்­மு­கத் தேர்­வுக்­கான அழைப்­புக் கடி­தங்­கள் அடுத்த வாரம் அனுப்பி வைக்­கப்­ப­டும் – என்­றார்.