தலை துண்டிக்கப்பட்ட நிலையில் தெருவில் பெண்ணின் சடலம்: கண்ணீர் விட்டு கதறிய குழந்தைகள்

மெக்ஸிகோ நாட்டில் இளம்பெண் ஒருவர் கழுத்து துண்டிக்கப்பட்ட நிலையில் தெருவில் இருந்து கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த பெண்ணை கடத்திய கும்பல் பெருந்தொகை கேட்டு மிரட்டியதாகவும், ஆனால் பணம் தர தாமதமானதால் கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சம்பவத்தன்று சுசானா கர்ரேரா என்ற அந்த இளம்பெண் தமது தோழியின் குடியிருப்புக்கு சென்று தனது குழந்தைகளில் ஒன்றை அழைத்துவர சென்றுள்ளார்.

அப்போது திடீரென்று அங்கே காரில் வந்த கும்பல் ஒன்று சுசானாவை வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றுள்ளது.

இந்த நிலையில் சுசானாவின் கணவருக்கு தொலைபேசியில் அழைத்த மர்ம நபர் 161,000 பவுண்டுகள் பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.

ஆனால் சுசானாவின் கணவரால் அந்த தொகையை வழங்க தாமதமானதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சுசானா கடத்தப்பட்டு ஒருவாரம் கடந்த நிலையில் Coatzacoalcos பகுதியில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் கிடப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து விசாரணை மேற்கொண்ட பொலிசார், தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட சடலம் சுசானாவினுடையது என உறுதியானது.

மட்டுமின்றி சுசானாவின் கணவரும் நடந்த சம்பவத்தை உறுதி செய்துள்ளார். சுசானா மற்றும் அவரது கணவருக்கும் சொந்தமாக Pexaluminio என்ற அலுமினிய நிறுவனம் ஒன்று உள்ளது.

இதனாலையே சுசானாவை கடத்திய மர்ம கும்பல் பெருந்தொகை கேட்டு மிரட்டியுள்ளதாக தெரியவந்துள்ளது.

Coatzacoalcos பகுதியில் கடந்த ஓராண்டில் மட்டும் 49 பேர் கடத்தப்பட்டு கொலை செய்துள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.