யாழில் இருந்து இந்தியாவுக்கு கப்பல் சேவை ஆரம்பம்?

யாழ். காங்கேசன்துறை துறைமுகத்திலிருந்து இந்தியாவின் காரைக்கால் பகுதிக்கான கடல்வழி மார்க்கமான கப்பல் சேவை ஆரம்பிக்கப்படுவது தொடர்பான கலந்துரையாடல் பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பு துறைமுக அதிகாரசபையின் தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்றுள்ளது.

கடல் வழி மார்க்கமான கப்பல் சேவை ஊடாக பல்வேறு வர்த்தக நடவடிக்கைகள், இலகு சேவை கட்டணங்கள், சுற்றுலா துறையின் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு நன்மைகளை அடைந்து கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆரம்ப கட்ட கலந்துரையாடலில் துறைமுக அதிகார சபையின் முகாமைத்துவ பணிப்பாளர் அதுலஹேசவிதாரன, சுங்கத் திணைக்கள உயரதிகாரி, குடிவரவு குடியகழ்வு உயரதிகாரி, கப்பல் சேவை முகவர்கள், பொலிஸ் உயரதிகாரிகள் உள்ளிட்ட பலமுக்கியஸ்தர்கள் பங்கேற்றிருந்தனர்.