தமிழ் பாடசாலை ஒன்றில் 19 மாணவர்கள் க.பொ.த சாதாரண தரத்தில் செய்த சாதனை! குவியும் பாராட்டுக்கள்

க.பொ.த சாதாரணதர பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று நள்ளிரவு வெளியானது. இந்த பரீட்சையில் அட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் 19 மாணவர்கள் 9ஏ சித்திகளை பெற்று சாதனை படைத்துள்ளதாக கல்லூரியின் அதிபர் ஆர்.ஸ்ரீதர் தெரிவித்தார்.

இப்பாடசாலையிலிருந்து இம் முறை பரீட்சைக்கு 195 மாணவர்கள் தோற்றியுள்ளனர். தோற்றிய 195 மாணவர்களுள், 194 மாணவர்கள் சித்தி அடைந்துள்ளதுடன், 194 மாணவர்கள் க.பொ.த உயர் தரம் கற்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.

இதில் தமிழ் மொழி மூலம் 17 மாணவர்களும், ஆங்கில மொழி மூலம் 02 மாணவர்களும், மொத்தமாக 19 மாணவர்கள் 9ஏ சித்திகளை பெற்றுள்ளனர்.

தமிழ் மொழி மூலம் தோற்றிய மாணவர்களான பீ.சாய்பிரசாத், பி.மதுஷ்கர், ஜீ.ஹரின் ஜெசிகா, பி.மிதுலாஷினி, எஸ்.கிருஷிகா, ஏ.மதுர்ஷிதா, கே.பவிஷாந்த், எஸ்.வேந்கர், கே.பூஜிதா, கே.சர்மினா, ஏ.எப்.எஸ்.கேசியா, ஜி.தினுஷன், ஆர்.நிவேதன், எச்.மதுஜா, வீ.அபிஜா, எஸ்.ஸ்ரீயாலினி, கே.சாருகேஷ் ஆகியோரும், ஆங்கில மொழி மூலம் தோற்றிய மாணவன் கே.பிரனவ், மாணவி ஆர்.பிரவிஷா உள்ளிட்ட 19 மாணவர்கள் 9 பாடங்களில் 9ஏ சித்திகளை பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

இப்பாடசாலையில் 100 சதவீத மாணவர்கள் இம்முறை உயர் தரத்திற்கு தகுதி பெற்றுள்ளதாகவும் கல்லூரியின் அதிபர் மேலும் தெரிவித்தார்.