இலங்கை பயணிகளுக்கு தற்காலிக தடை தொடர்பில் அறிவிப்பு

இலங்கையில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலைய அடுத்து தனியார் பேருந்துகளில் பயணிப்போருக்கான முக்கிய அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.

அந்த வகையில் தனியார் பேருந்துகளில் பொதிகளை கொண்டு செல்வதற்கு தற்காலிக தடை விடுக்கப்பட்டுள்ளது.

நேற்று முதல் இந்த தற்காலிக தடை கொண்டு வரப்பட்டுள்ளதுடன், பயணிகளின் பாதுகாப்பிற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

அத்துடன் அறிவித்தல் வரும் வரையில் தனியார் பேருந்துகளில் பொதிகளை பொறுப்பேற்க வேண்டாம் என சாரதிகள் மற்றும் நடத்துநர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் புகையிரதங்களிலும் பொதிகளை பொறுப்பேற்கும் நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளதாக புகையிரத நிலைய பொது முகாமையாளர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் நேற்று காலை முதல் கொழும்பு, மட்டக்களப்பு, நீர்கொழும்பு உள்ளிட்ட எட்டு இடங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களில் 250 இற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது