இன்று மீண்டும் ஊரடங்கு உத்தரவு நடைமுறைக்கு வருகிறது!

இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புக்களின் பின்னரான பாதுகாப்பு நடைமுறைகளின்படி மீண்டும் இன்றைய தினம் ஊரடங்கு உத்தரவு அமுல்ப்படுத்தபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இன்று முன்னிரவு எட்டுமணியிலிருந்து நாளை அதிகாலை நான்கு மணிவரை இந்த உத்தரவு நடைமுறையில் இருக்கும் என்று பொலிஸ் தரப்பு அறிவித்துள்ளது.

இதேவேளை நேற்றைய தினம் உடன் அமுலுக்கு வரும் வகையில் மாலை வேளையில் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு இன்று காலை ஆறு மணியளவில் தளர்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஊரடங்கு உத்தரவுக் காலத்தில் தடைப்பட்டிருந்த போக்குவரத்துக் கட்டமைப்புக்கள் மீண்டும் இன்று காலையிலிருந்து வழமைக்குத் திரும்பின.

எனினும் இன்று மாலை ஊரடங்கு அமுலுக்கு வருவதனால் மீண்டும் இரவுப் போக்குவரத்துக் கட்டமைப்புக்களில் சிக்கல் நிலை தோன்றக்கூடிய வாய்ப்புக்கள் இருப்பதாக நம்பப்படுகின்றது.