மீட்பு பணியின் போது நேர்ந்த அவலம்: ஹெலிகொப்டரில் இருந்து விழுந்த பணியாளர் : காலியில் சம்பவம்

மீட்பு பணியின் போது நேர்ந்த அவலம்: ஹெலிகொப்டரில் இருந்து விழுந்த பணியாளர் : காலியில் சம்பவம்

காலி நெலுவ  பகுதியில் மீட்பு பணிக்காக சென்றிருந்த Mi27 ரக ஹெலிகாப்டரில் பயணம் செய்த மீட்பு பணியாளர் ஒருவர் தவறி வெள்ளத்தில் விழுந்துள்ளார்.

இந்நிலையில் வெள்ளத்தில் விழுந்த குறித்த நபர் உட்பட, வெள்ளத்தில் சிக்குண்ட மேலும் இருவர் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்று காலை காலி நெலுவ கொஸ்முல்ல – துலி எல்ல பகுதியிலுள்ள தேயிலை தொழிற்சாலையில் மண்மேடொன்று சரிந்து விழுந்ததில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்தோடு அதிகளவான அனர்த்த இடம்பெற்ற மாவட்டமாக காலி மற்றும் களுத்துறை மாவட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like