ஊரடங்கு தொடர்ந்தால் மட்டு – கொழும்பு புகையிரதம் சேவையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

பொலிஸ் ஊரடங்கு தொடர்ந்தால் மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி இடம்பெறும் மாலை மற்றும் இரவு நேர ரயில்கள் இடம்பெறாது எனவும் பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்படாத தினங்களில் மாலை மற்றும் இரவு நேர ரயில் சேவையில் ஈடுபடும் எனவும் மட்டக்களப்பு ரயில்வே நிலையத்தின் பிரதான ரயில் நிலைய அதிபர் சின்னத்தம்பி சுவேதகுமாரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி இடம்பெறும் ரயில் தொடர்பில் வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

மட்டக்களப்பிலிருந்து கொழும்புக்கும் கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கும் காலை மற்றும் மாலை, இரவு நேரங்களில் சேவையில் ஈடுபடும் மூன்று ரயில்களில் காலையில் சேவையில் ஈடுபடும் ஒரு ரயில் மாத்திரம் தற்போது சேவையில் ஈடுபடுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதே வேளை காலை 11.00 மணிக்கு மட்டக்களப்பிலிருந்து மாகோ சந்திக்கு ஒரு ரயில் சேவையில் ஈடுபடுவதுடன், இரவு நேர எரிபொருள் ரயில் இன்னும் சேவையில் ஈடுபடவில்லை.