தெஹிவளை குண்டுத்தாரியின் இலக்கு மாறியது எப்படி? வெளிப்படுத்திய முச்சக்கர வண்டி சாரதி

தெஹிவளை, ட்ரொபிக்கள் ஹோட்டலில் குண்டுத்தாக்குதல் மேற்கொண்ட தற்கொலை குண்டுத்தாரியுடன் நெருக்கமான தொடர்பு வைத்திருந்த சாரதி ஒருவர் அழுத்கம பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மொஹமட் பசீர் மொஹமட் பஸ்ஹான் என்ற பெயருடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

தெஹிவளை ட்ரொபிக்கள் ஹோட்டலில் குறித்த குண்டுத்தாரி குண்டை வெடிக்க வைப்பதற்கு முன்னர் சாரதியுடன் கதைத்த விடயங்களை சாரதி வெளிப்படுத்தியுள்ளார்.

தாஜ் சமுத்ரா ஹோட்டலே பிரதான இலக்கு எனவும் அந்த சந்தர்ப்பத்தில் வெடிகுண்டை வெடிக்க வைக்க முடியாமல் போனதாகவும், குண்டுத்தாரி சாரதியிடம் குறிப்பிட்டுள்ளார். அந்த சந்தர்ப்பத்தில் வெடிகுண்டு செயலிழந்துவிட்டமையே அதற்கான காரணம் என குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் குண்டுத்தாரியின் அடுத்த இலக்கு தெஹிவளையில் அமைந்து தூய மேரி தேவாலயம் என குறிப்பிட்டதாக சாரதி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

அந்த தேவாலயத்தில் வெடி குண்டை வெடிக்க வைத்து கொள்ளுவதாகவும் குண்டுத்தாரர் தன்னிடம் குறிப்பிட்டார் என சாரதி கூறியுள்ளார்.

குண்டுத்தாரி அந்த இடத்திற்கு சென்ற போதிலும் பொலிஸ் அதிகாரி இருந்தமையினால் தன்னதால் தனது இலக்கினை மாற்ற நேரிட்டுள்ளதாக சாரதி கூறியுள்ளார்.

குறித்த தேவாலயத்தில் இருந்த காணிக்கை பெட்டி அதற்கு சில நாட்களுக்கு முன்னர் சிலரால் உடைக்கப்பட்டமையினால் அந்த தேவலாயத்திற்கு பொலிஸார் நியமிக்கப்பட்டனர். இதனால் அந்த இலக்கு தவறியுள்ளது.

பின்னர் குண்டுத்தாரி தெஹிவளையில் அமைந்துள்ள ட்ரொப்பிக்கள் ஹோட்டலுக்கு சென்று குண்டை வெடித்து கொண்டதாக முச்சக்கர வண்டி சாரதி பொலிஸார் தெரிவித்துள்ளார்.