‘அடித்து கொன்று விடுவேன்’ : தகாத வார்த்தைகளால் திட்டி ஊடகவியலாளரை தாக்க முயற்சித்த அமைச்சர்

‘அடித்து கொன்று விடுவேன்’ : தகாத வார்த்தைகளால் திட்டி ஊடகவியலாளரை தாக்க முயற்சித்த அமைச்சர்

‘பொய்யான தகவல்களை பரப்பினால் தூக்கி அடித்து கொன்று விடுவேன்” என சுற்றுலாத்துறை மற்றும் கிறிஸ்தவ மத விவகாரங்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க ஊடகவியலாளர் ஒருவரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்குவதற்கு முயற்சி செய்ததோடு கொலை அச்சுறுத்தலும் விடுத்தார்.

போபிடிய பகுதியில் குப்பை கொட்டுவது தொடர்பில், ஊடகவியலாளர் ஒருவர் வினவிய போது, திடீரென கோபமடைந்த அமைச்சர், ஊடகவியலாளரை தகாத வார்த்தைகளால் திட்டியோடு கொலை அச்சுறுத்தலும் விடுத்தார்.

குறித்த ஊடகவியலாளர் வினவியதையடுத்து, அமைச்சர் ஜோன் அமரதுங்க அவரை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, குறித்த சம்பவம் தொடர்பாக பொய்யான தகவல்களை பரப்பினால் கொண்டற்று விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.

கொழும்பில் சேகரிக்கப்படும் குப்பைகள், வத்தளை கெரவலபிடிய, முத்துராஜவல ஆகிய பகுதிகளில் கொட்டப்படுவதற்கு பிரதேச மக்கள் எதிர்ப்பினை வெளிப்படுத்துவது தொடர்பில் அமைச்சர் ஜோன் அமரதுங்கவின் கந்தானை அலுவலகத்தில் இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

கலந்துரையாடல் நிறைவடைந்து ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்க வந்த அமைச்சரிடம் ஊடகவியலாளர், போபிடிய பகுதியில் குப்பைகள் கொட்டுவதற்கு அமைச்சர் மீது மக்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர் என ஊடகவியலாளர், அமைச்சரை வினவியபோதே அமைச்சர் கோபமடைந்தார்.

அத்தோடு குறித்த ஊடகவியலாளரை செய்தி சேகரிப்பதற்கு இனிமேல் அனுமதிக்க கூடாதெனவும், உடேன அங்கிருந்து வெளியேற்றுமாறும், தவறான செய்திகளை வெளியிட்டால் என்னை கெட்டவன் என்று கூற வேண்டாம் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதன் போது ஊடகவியலாளரை அமைச்சர் தாக்குதற்கு பல தடவைகள் முயற்சித்த போதும் அருகில் இருந்தவர்கள் தடுத்தமை குறிப்பிடத்தக்கது.