இம்முறை தீபாவளி பண்டிகையின் போது யாழில் தற்காலிக கடைகளுக்கு அனுமதியில்லை.

இம்முறை தீபாவளி பண்டிகையின் போது யாழில் தற்காலிக கடைகளுக்கு அனுமதியில்லை.

எதிர்வரும் தீபாவளி பண்டிகையின் போது யாழ் நகரை அண்டிய பகுதிகளில் தற்காலிக கடைகளுக்குரிய அனுமதி நிறுத்தப்பட்டுள்ளதாக உள்ளூராட்சி சபைகளினால் அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த மாதம் வடக்கு மாகாண சபை அமர்வில் முன்னால் யாழ்ப்பாண வர்த்தக சங்க தலைவரும் தற்போதைய மாகாண சபை உறுப்பினருமாகிய ஜெயசேகரத்தினால்.பண்டிகைக் காலங்களில் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் வர்த்தகர்களுக்கு உள்ளூராட்சி சபைகள் அனுமதி வழங்குவதனால் யாழ்ப்பாணத்தில் உள்ள நிரந்தரமாக வர்த்தகம் புரியும் வர்த்தகர்களின் வர்த்தக நடவடிக்கைகள் பாதிப்பப்படுவதனையும் சுட்டிகாட்டி பிரேரணை ஒன்றினை முன்மொழிந்திருந்தார். இதனையடுத்து வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சரான முதலமைச்சரினால் உள்ளூராட்சி ஆணையாளருக்கு கடிதம் மூலம் எந்த வொரு தற்காலிக கடைகள் மற்றும் நடைபாதை வியாபாரங்களுக்கும் உள்ளூராட்சி சபைகளினால் இந்த தீபாவளி பண்டிகையின் போது அனுமதி வழங்க கூடாது என அறிவிக்கப்பட்ட நிலையில் இம்முறை தீபாவளி பண்டிகையின் போது யாழ் குடா நாட்டில் எந்தவொரு தற்காலிக கடைகளுக்கும் உள்ளூராட்சி சபைகளினால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.