தமிழரர் தரப்பின் முறைப்பாடுகளை தொடர்ந்து இராணுவ அதிகாரி இடைநிறுத்தம்; ஐ.நா. அதிரடி முடிவு

ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் படையின் நடவடிக்கைகளில் இணையவிருந்த இலங்கை இராணு அதிகாரி லெப்டினன் கேர்ணல் ரத்னபுலி வசந்தகுமாரவை ஐக்கியநாடுகள் சபை இடை நிறுத்தியுள்ளது.

அமைதிகாக்கும் பணிக்காக லெபனான் செல்லவிருந்த நிலையில் போர் குற்றவாளியான குறித்த அதிகாரிக்கு எதிராக ஐ.சி.பி.பி.ஜியின் இயக்குனர்களான அம்பிகை சீவரத்தினம், பிரபல சட்டவல்லுனர் கீத் குலசேகரம், நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், மற்றும் தமிழ் தேசிய பற்றாளர்கள் போன்றோரிடமிருந்து ஐ.நா.வுக்கு கிடைக்கப்பட்ட முறைப்பாடுகளின் அடிப்படையிலேயே அவர் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதுகுறித்து இன்னர் சிற்றி பிரஸ் ஊடகத்துக்கு கருத்து வெளியிட்டுள்ள ஐ.நா பொதுச்செயலரின் பிரதி பேச்சாளர் பர்ஹான் ஹக், குறித்த மீளாய்வுகள் முடியும் வரை லெபனானுக்கு அனுப்பப்படுவது இடைநிறுத்தப்பட்டுள்ளது எனவும் முழுமையான மீளாய்வின் பின்னரே அவரை அங்கு நிறுத்துவது குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும், குறித்த இராணுவ அதிகாரியின் பின்னணி தொடர்பாக நாம் இலங்கையின் அதிகாரிகளுடன் தொடர்புகொண்டுளோம். அவர்கள் எமது விசரணைக்கு முழுமையாக ஒத்துழைக்கிறார்கள்.

இதனிடையே, இராணு அதிகாரி ரத்னபுலி வசந்தகுமாரவுக்கு எதிராக ஐ.நா.வின் அமைதிகாக்கும் பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட பெரும்பாலான முறைப்பாட்டு கடிதங்களில், அவர் 2009 ஆம் ஆண்டு புதுக்குடியிருப்பு தாக்குதலில் பிரதான வீரராகவும் மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் தலைமையிலான 57 பிரிவின் கீழ் செயல்பட்ட 4 ​​படைப்பிரிவின் செயல்பாட்டு தளபதியாக கிளிநொச்சியில் இரத்தம் தோய்ந்த இராணுவத் தாக்குதலில் அவர் தீவிரமாக பங்குபற்றியவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனித உரிமை மீறல்கள் பற்றிய அறிக்கைகளை ஐ.நா மிகத் தீவிரமாக எடுத்துக் கொள்ளும் எனவும், அத்துடன் கொள்கைகளின் அடிப்படையில், ஐ.நா. உடன் பணியாற்றும் அனைத்து பணியாளர்களும் உயர்ந்த செயல்திறன், திறமை, நேர்மை ஆகியவற்றையும், மனித உரிமைகளுக்கு மதிப்பளிப்பவர்களாகவும், அர்ப்பணிப்புள்ளவர்களாகவும் இருப்பதை உறுதிபடுத்த வேண்டியது எமது கடப்பாடாகும்” என்று தெரிவித்துள்ளார்.

இதே வேளை இலங்கையின் சுதந்திர தினத்தின் போது பிரித்தானியாவில் புலம்பெயர் தமிழர்களை அச்சுறுத்திய பிரிகேடியர் பிரியங்கவை இலங்கைக்கு மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார். இவரின் குற்றத்தை சுட்டிக்காட்டி தமிழர்களுக்கு நீதி பெற்றுக்கொடுத்த கீத் குலசேகரம் அவர்களுக்கு உலகளாவிய ரீதியில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

பிரியங்க மற்றும் கேர்ணல் ரத்னபுலி ஆகியோர் மீதான சர்வதேசத்தின் அழுத்தங்கள் இலங்கை அரசிற்கு ஒரு பின்னடைவாகவே கருதப்படுகிறது.