நல்லூர் பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் ஆடை வடிவமைத்தல், கைவேலை, அழகுக்கலை, மனைப்பொருளியல் கண்காட்சி – 2018 (படங்கள்)

வடக்கு மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்கள அனுசரணையுடன் நல்லூர் பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் ஆடை வடிவமைத்தல், கைவேலை, அழகுக்கலை, மனைப்பொருளியல் கண்காட்சி – 2017 அரியாலை கண்டி வீதியில் அமைந்துள்ள சரஸ்வதி சனசமூக நிலைய மண்டபத்தில் 20.02.2018 அன்று நல்லூர் பிரதேச செயலாளர் திருமதி எழிலரசி யோகநாயகம் அவர்களின் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக யாழ். மாவட்ட வடக்கு மாகாணசபை உறுப்பினர் என். கனகரட்ணம் விந்தன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக வடக்கு மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்கள மாகாணப் பணிப்பாளர் திரு. ஜே.ஜே.சி.பெலிசியன், யாழ் மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. நா. பஞ்சலிங்கம் ஆகியோரும், கௌரவ விருந்தினர்களாக யாழ். பல்கலைக்கழக ஓய்வுநிலை துணைவேந்தரும் அரியாலை சனசமூக நிலைய முன்னாள் தலைவருமான பேராசிரியர் எஸ். மோகனதாஸ்,  அரியாலை மத்தி ஜேஃ95 கிராம அலுவலர் திரு. ஆர். தவரட்ணம், நல்லூர் கிராம, மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்களின் சமாசத் தலைவர் திரு. செ. சண்முகலிங்கம் மற்றும் அரியாலை சரஸ்வதி சனசமூக நிலைய செயலாளர் திரு. எஸ். அமிகைதனேசிகன் ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

கண்காட்சியினை இந் நிகழ்வின் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்த யாழ். மாவட்ட வடக்கு மாகாணசபை உறுப்பினர் என். கனகரட்ணம் விந்தன் அவர்கள் நாடாவை வெட்டி ஆரம்பித்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்வின் பதிவுகளைப் படங்களில் காணலாம்.