இன்றைய ராசிபலன் 18-02-2018

மேஷம்: காரியங்களில் அனுகூலம் உண்டாகும். தேவையான பணம் கையில் இருந்தாலும், தேவையற்ற செலவுகளும் ஏற்படக்கூடும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும். அலுவலகத்தில் உங்கள் ஆலோசனை ஏற்றுக் கொள்ளப்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட விற்பனை குறைவாகத்தான் இருக்கும். பணியாளர்களால் செலவுகள் ஏற்படக்கூடும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.

ரிஷபம்: எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும். தேவையான பணம் கையில் இருப்பதால், உற்சாகமாகக் காணப்படுவீர்கள். சிலருக்கு பணியின் காரணமாக பயணம் மேற்கொள்ள நேரிடும். மாலையில் உறவினர்கள் வருகை சில சங்கடங்களைத் தரக்கூடும் என்பதால், பொறுமை அவசியம். வாழ்க்கைத்துணைவழி உறவுகளுக்காக செலவு செய்யவேண்டி வரும். சகோதரர்கள் உங்களுடைய யோசனையை ஏற்றுக்கொள்வார்கள். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.

மிதுனம்: முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைப்பதுடன், அதனால் சில நல்ல வாய்ப்புகளும் ஏற்படும். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சகோதரர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். மாலையில் குடும்பத்துடன் உறவினர் வீட்டு விசேஷத்தில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும். வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் அனுகூலம் உண்டாகும்.

கடகம்: எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். வெளியூர்ப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. அலுவலகப் பணிகளிலும் கூடுதல் கவனம் தேவைப்படும். உறவினர்கள் வருகையால் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். மாலையில் நீண்டநாள்களாகச் சந்திக்காமல் இருந்த நண்பர்களைச் சந்தித்து மகிழும் சந்தர்ப்பம் ஏற்படும். வியாபாரத்தில் பணியாளர்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கவும். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படக்கூடும்.

சிம்மம்: இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வெளியூர்ப் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்கவும். தேவையான பணம் இருப்பதால் செலவுகளைச் சமாளித்து விடுவீர்கள். குடும்பத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி வந்து சேரும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் மறைமுக விமர்சனங்கள் ஏற்படக்கூடும். பணியாளர்களால் சங்கடங்கள் ஏற்படக்கூடும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூரில் இருந்து எதிர்பார்த்த செய்தி கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.

கன்னி: உற்சாகமான நாளாக அமையும். திடீர் பொருள்வரவு உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். தந்தை வழியில் எதிர்பார்த்த காரியம் சற்று தாமதமாகத்தான் முடியும். புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. வாழ்க்கைத்துணை வழி உறவுகளிடம் எதிர்பார்த்த காரியம் நல்லபடி முடியும். தந்தை வழி உறவுகளால் ஆதாயம் இருந்தாலும் செலவுகளும் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் செலவுகள் ஏற்படக்கூடும்.

துலாம்: இன்று எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். சகோதர வகையில் செலவுகள் ஏற்படக்கூடும் என்றாலும், அதனால் மகிழ்ச்சியே ஏற்படும்.எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். வாழ்க்கைத் துணையால் மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களை தரிசித்து ஆசி பெறும் வாய்ப்பு உண்டு.

விருச்சிகம்: மனதில் இனம் தெரியாத உற்சாகம் பெருக்கெடுக்கும். வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், வெளியில் உண்பதைத் தவிர்க்கவும். புதிய முயற்சியை ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. பிள்ளைகளுக்காக செலவு செய்யவேண்டி வரும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும். வெளியூர்ப் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்கவும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் செலவுகள் ஏற்படக்கூடும்.

தனுசு: மகிழ்ச்சியான நாள். திடீர் செலவுகள் ஏற்பட்டாலும் தேவையான பணம் இருப்பதால் சமாளித்து விடுவீர்கள். சிலருக்கு சிறிய அளவில் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். கணவன் – மனைவிக்கிடையில் பரஸ்பரம் அந்நியோன்யம் அதிகரிக்கும். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணை ஆதரவு தருவார். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டாகும்.

மகரம்: மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். தந்தை வழி உறவுகளால் பணவரவுக்கு வாய்ப்பு ஏற்படும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகளை ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. இளைய சகோதர வகையில் அனுகூலம் உண்டாகும். வாழ்க்கைத் துணையால் செலவுகள் ஏற்படக்கூடும். வியாபாரம் வழக்கம்போலவே நடைபெறும். பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்புத் தருவார்கள். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.

கும்பம்: உற்சாகமான நாள். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்தாலும் செலவுகளும் தொடர்ந்து வரும். உங்கள் முயற்சிகளுக்கு சகோதரர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். மாலையில் குடும்பத்துடன் வெளியிடங்களுக்குச் சென்று வருவீர்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தை வழியில் எதிர்பார்த்த காரியங்களில் அனுகூலம் உண்டாகும்.

மீனம்: தெய்வ அனுக்கிரகம் நிறைந்த நாளாக இருக்கும். காரியங்களில் சிறுசிறு தடைகள் ஏற்பட்டாலும் அதனால் பாதிப்பு எதுவும் இருக்காது. கணவன் – மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். மாலையில் சிலருக்கு புதிய ஆடை ஆபரணங்களை வாங்கும் யோகம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் எதிர்பார்த்த விற்பனை இருந்தாலும், கூடுதலாக உழைக்கவேண்டி இருக்கும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

Get real time updates directly on you device, subscribe now.