பெற்றோலிய தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்வதற்கான கலந்துரையாடல் (படங்கள்)

வடக்கில் நிலவிவரும் எரிபொருள் விற்பனைக் குறைபாட்டை நிவர்த்தி செய்யும்பொருட்டு யாழ் காங்கேசன்துறையில் பாரிய இரண்டு எண்ணைக்கிடங்குகள் அமைக்கப்படவுள்ளதுடன் பத்து ஏக்கரில் காங்கேசன்துறை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக கனியவளங்கள் மற்றும் பெற்றோலிய அமைச்சர் அர்ஜின ரணதுங்க தெரிவித்தார்

பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் ஏற்பாட்டில் வட பிராந்திய பெற்றோலிய கூட்டுத்தாபன விற்பனை முகவர்களுடனான சந்திப்பொன்யு யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்றது

யாழ் பொது நூலகத்தில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் கனியவளங்கள் மற்றும் பெற்றோலிய அமைச்சர் அர்ஜின ரணதுங்க பிரதம அதிதியாக கலந்துகொண்டு வடபிராந்திய பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் உள்ள குறைபாடுகள் தொடர்பில் கேட்டறிந்தார்

வடமாகாணத்தில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் கீழுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நிலவும் பிரச்சனைகள் மற்றும் தேவைகள் தொடர்பில் எரிபொருள் விற்பனை நிலைய உரிமையாளர் இதன்போது வெளிப்படுத்தினர்-குரல்கள்-

குறிப்பாக வடக்கில் அடிக்கடி நிலவும் பெற்றோல் மற்றும் மண்ணெண்ணை தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுப்பதுடன் நீண்ட காலமாக புனரமைக்கப்படாமல் உள்ள எரிபொருள் நிரப்பு நலையங்களை புனரமைத்துதருமாறும் இவர்கள் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்
இதற்கான நீண்டகால திட்டமொன்றை யாழ் மாவட்டத்தை முன்னிலைப்படுத்தி தாம் முன்னடுக்கவிருப்பதாக அமைச்சர் இங்கு உரையாற்றுகையில் குறிப்பிட்டார்-குரல்-

இந்த கலந்துரையாடலில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாக முகாமையாளர் சஞ்ஞீவ விஜயரட்ண மற்றும் அமைச்சின் அதிகாரிகள் வடமாகாண பெற்றோலிய கூட்டுத்தபானத்தின் முகாமையாளர்கள், மற்றும் உயர் அதிகாரிகள், முகவர்கள் எனப்பலர் கலந்துகொண்டுள்ளனர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like