வடமாகாண முதலமைச்சரின் நடவடிக்கையை கண்டித்து தொண்டராசிரியர்கள் போராட்டம்

வடமாகாண முதலமைச்சரின் நடவடிக்கையை கண்டித்து யாழிலுள்ள வடக்கு முதல்வர் அலுவலகம் முன்பாகவும் தொண்டராசிரியர்கள்  போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர்

இன்றையதினம் 182 வட மாகாண தொண்டராசிரியர்களிற்கான நிரந்தர நியமனமும் 142 பேருக்கு ஒப்பந்த அடிப்படையிலான நியமனமும் கொழும்பில் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது
இந்நிலையில் இந்த நியமனத்தை நிறுத்துமாறு வடமாகாண முதலமைச்சர் மத்திய கல்வி அமைச்சிற்கு அனுப்பியிருந்த நிலையில் குறித்த நியமனம் திடீரென நிறுத்தப்பட்டுள்ளதாக நியமனம் பெற்றுக்கொள்ளவிருந்த தொண்டராசிரியர்கள் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
யாழ் கைதடியிலுள்ள வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் அலுவலகத்திற்கு முன்பாக குறித்த் தொண்டராசிரியர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தை ஆரம்பித்துள்ளதுடன் இந்த நியமனம் தமக்கு வழங்கப்படாவிட்டால் தமது போராட்டத்தை தொடரப்போவதாகவும் தெரிவித்தனர்-
குறித்த நியமனத்தை வழங்கவேண்டாம் என கடந்த ஏழாம்திகதி நியமனத்தில் உள்ளீர்க்கப்படாத ஏனைய தொண்டராசிரியர்கள் மேற்கொண்ட போராட்டத்திற்கமைவாக முதலமைச்சர் இந்நடவடிக்கையை மேற்கொண்டதாக அறிய முடிகின்றது
எனினும் அனுமதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு முதலில் நியமனத்தை வழங்கிவிட்டு மிகுதி ஆசிரியர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரியுள்ளனர்-குரல்-
வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இன்று தமது அலுவலகத்திற்கு வருகை தராத நிலையில் அவரை சந்தித்து எழுத்து மூலமான பதில் பெற்றுக்கொள்ளும்வரை போராட்ட்ததை தொடரப்போவதாகவும் இவர்கள் தெரிவித்தனர்

Get real time updates directly on you device, subscribe now.

You might also like