வவுனியா வேப்பங்குளம் பகுதியில் விபத்து!

வவுனியா வேப்பங்குளம் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் மூவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் பற்றி அறியவருவதாவது

மன்னார் திருக்கேதீஸ்வரம் கோவிலுக்கு சென்று விட்டு வவுனியா நோக்கி பயணித்து கொண்டிருந்த வேன் ஒன்று வவுனியா மன்னார் வீதி வேப்பங்குளம் ஆறாம் ஒழுங்கை பகுதியில் கற்பகபுரம் நோக்கி பயணித்த பேருந்து தரித்து நின்ற பேருந்து ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் வேனில் பயணித்தவர்களில் மூவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

மேலும் குறித்த வேனில் பயணித்த குழந்தை ஒன்று தெய்வாதீனமாக எவ்வித காயங்களுமின்றி தப்பியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் நித்திரை மயக்கத்தில் சாரதி வேனை செலுத்தியுள்ளதாகவும் அறியப்படுகிறது.

Get real time updates directly on you device, subscribe now.