எதிர்பார்ப்பில் சரிவு ஏற்பட்டுள்ளது : ஏற்றுக் கொள்ளும் அனுரகுமார

ஜே.வி.பி. கட்சியின் எதிர்பார்ப்பில் சற்று சரிவு ஏற்பட்டுள்ளதாக அதன் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் குறித்து ஊடகங்களுக்கு கருத்து வௌியிடும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த தேர்தல்களை விட ஜே.வி.பி. இம்முறை கூடுதலான உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களையும், அதிக வாக்குகளையும் பெற்றுள்ளதாகவும் கூறியுள்ளார்.

எனினும், ஒரு கட்சி என்ற வகையில் நாம் எதிர்பார்த்திருந்த பெறுபேற்றை அடைந்து கொள்ள முடியவில்லை. எமது எதிர்பார்ப்பில் சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அதே ​நேரம் மைத்திரி- ரணில் ஆகியோர் மீது பொதுமக்கள் தங்கள் அதிருப்தியை இத்தேர்தலின் ஊடாக தௌிவாக வௌிக்காட்டி உள்ளார்கள் என்றும் அனுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

எதிர்பார்ப்பில் சரிவு ஏற்பட்டுள்ளது : ஏற்றுக் கொள்ளும் அனுரகுமார

Get real time updates directly on you device, subscribe now.