மகிந்த தலைமையிலான பொதுஜன பெரமுன முன்னணி அமோக வெற்றி?

நடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான பொதுஜன பெரமுன முன்னணி அமோக வெற்றி வெற்றி பெற்றிருப்பதாக, அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

 வட்டார ரீதியாக வெளியாகியுள்ள அதிகாரபூர்வமற்ற தகவல்களின்படி பொதுஜன பெரமுன முன்னணி 15 மாவட்டங்களில் வெற்றியைப் பெற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் ஐ.தே.க வெற்றி பெறும் நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், உத்தியோகபூர்வமான முடிவுகள் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதேவேளை, உள்ளூராட்சி தேர்தலில், அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள கட்சிகள் வெற்றி பெறும் என்று வெளியான புலனாய்வு தகவல்கள் முற்றிலும் தவறாகிப் போயுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேலதிக விபரங்கள் அறிய இங்கே அழுத்தவும்தேர்தல்கள் ஆணைக்குழு elections

Get real time updates directly on you device, subscribe now.

You might also like