வடக்கில் இன்று மின்தடை!

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக வடமாகாணத்தின் சில பகுதிகளில் நாளை ஞாயிற்றுக்கிழமை(28) மின்சாரம் தடைப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இதன்பிரகாரம், நாளை காலை-08.30 மணி முதல் மாலை-05.30 மணி வரை யாழ். மாவட்டத்தின் அளவெட்டி, மல்லாகம், பன்னாலை, சிறுவிளான், வீமன்காமம், வறுத்தலை விளான், தையிட்டி, பலாலி, மின்சார நிலைய வீதி, ஹற்றன் நஷனல் வங்கியின் பிராந்திய அலுவலகம், ஞானம்ஸ் விடுதி,இராணுவ முகாம், பலாலி இராணுவத் தலைமைக் காரியாலயம், பலாலி இலங்கை விமானப்படை முகாம், பலாலி விமானப்படை ஓய்வுகால விடுதி ஆகிய பகுதிகளிலும்,
காலை- 09 மணி முதல் மாலை-06 மணி வரை முல்லைத்தீவு மாவட்டத்தையும் உள்ளடக்கிய இலங்கை மின்சார சபையின் சேவைக்குட்பட்ட கிளிநொச்சிப் பிரதேசத்தில் இரணைமடு, கிளிநொச்சி வைத்தியசாலை, கிளிநொச்சி இலங்கைத் தொலைத் தொடர்பு நிலையம், ஆனந்தபுரம், உதயநகர், தொண்டமான் நகர், கிருஸ்ணபுரம், அம்பாள் குளம், பாரதிபுரம், மலையாளபுரம், விநாயகபுரம், விவேகானந்தா நகர், விக்கிரமரட்ண பிறைவேற் லிமிற்றெட் ஆகிய பகுதிகளிலும்,
காலை- 08 மணி முதல் மாலை-05 மணி வரை வவுனியா மாவட்டத்தின் நெடுங்குளம் கிராமம், அரசமுறிப்புக் கிராமம், ராஜ் மீன்பிடிக் கூட்டுத் தாபனம் ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like