யாழ்ப்பாணம் சர்வதே வர்த்தக சந்தை கண்காட்சி

யாழ்ப்பாணம் சர்வதே வர்த்தக சந்தை கண்காட்சி இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமாகி எதிர்வரும் 28 ஆம் திகதி வரை தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது.
யாழ் மாநகர சபை மைதானத்தில் 9ஆவது முறையாக நடைபெறவுள்ள இந்த வர்த்தக சந்தையில் இந்தியாவின் வர்த்தக தொழிற்துறையின் மன்றங்களை ஒன்றிணைத்த அசோக் சாம் அமைப்பிலுள்ள 75 நிறுவனங்கள் இம்முறை நேரடியாக கலந்து கொள்ளவுள்ளன.
300க்கு மேற்பட்ட விற்பனை நிலையங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. இதில் உள்ளுர் உற்பத்தி தயாரிப்புக்களுக்கு முக்கியத்துவம் கண்காட்சிக் கூட அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்திய வர்த்தக துறைக்கென தனியானதொரு பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. எனினும் அங்கு ஒரு சில பகுதிகளிலேயே காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன் ஏனைய பகுதிகள் வெறுமையாகவே உள்ளது. 
நுழைவுக் கட்டணமாக 40 ரூபா அறவிடப்படுகிறது. பாடசாலை சீருடையில் வரும் மாணவர்களுக்கு கண்காட்சி இலவசமாக பார்வையிட அனுமதிக்கப்பட்டுள்ளன.