கணிதப்பாடப் பிரிவில் முதலாம் இடம் – தனது வெற்றிக்கான காரணத்தை கூறும் துவாரகன்! (Video)

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் ​நேற்றிரவு வெளியாகியுள்ளன. 
இதன்படி, அகில இலங்கை ரீதியில் கணிதப்பாடப் பிரிவில் முதலாம் இடத்தை யாழ்ப்பாணம் – பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியின் மாணவர் சிறிதரன் துவாரகன் பெற்றுள்ளார்.
தாம் அகில இலங்கை ரீதியாக முதலாம் இடம்பெற்றமை தொடர்பில் அவர் எமது செய்திப்பிரிவிடம் மகிழ்ச்சி வெளியிட்டார்.
அவர் எமது செய்திப் பிரிவிற்கு வழங்கிய செவ்வியில் ,
“எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் படித்ததால்தான் தனக்கு இந்த இந்த பெறுபேற்றை பெற்றுக்கொள்ள முடிந்தது.
நான் ஒரேயோரு மேலதிக வகுப்புக்கு மாத்திரமே சென்றேன். 
இதனால் எனக்கு நீண்ட நேரங்கள் படிப்பதற்கு நேரம் காணப்பட்டது.
எனது தந்தை ஒரு தகவல் தொழிநுட்பவியல் ஆசிரியராக இருப்பதால் எனக்கு கணணி பயன்படுத்துவது மிக இலகுவாக இருந்தது.
எனக்கு புரிந்து கொள்ள முடியாத பாடங்களை இணையத்தில் தேடிப்பெற்று படித்தேன்.
இதனால் பல பாடங்களை இலகுவாக புரிந்து கொள்ள முடிந்தது.
அதுமட்டுமின்றி , எனது பாடசாலையில் உள்ள நூலகத்தில் பாடம் சம்பவந்தப்பட்ட பல விடங்களை தேடிப் படித்தேன்.
மேலும் , நான் இந்த பெறுபேறை பெற உதவியாக இருந்த எனது பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் எனது பெற்றோர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.” 
இவ்வாறு அகில இலங்கை ரீதியில் கணிதப்பாடப் பிரிவில் முதலாம் இடத்தை பெற்ற மாணவர் சிறிதரன் துவாரகன் தெரிவித்திருந்தார்.