புதிய இராணுவப் பேச்சாளராக பிரிகேடியர் சுமித் அதபத்து நியமனம்

புதிய ஊடக பணிப்பாளர் மற்றும் இராணுவ பேச்சாளராக இராணுவ பொறிமுறை காலாட் படையணியின் சிரேஷ்ட அதிகாரியான பிரிகேடியர் சுமித் அதபத்து பதவியேற்றுள்ளார்.

கொழும்பு 4இல் அமைந்துள்ள அவரது பணிமனையில் தனது கடமைகளை நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

இவர் 1986 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17 ஆம் திகதி இலங்கை இராணுவ நித்திய படையணியில் இணைந்து 32 வருடங்களை பூர்த்தி செய்த பிரிகேடியர் சுமித் அதபத்து இராணுவ சிங்க படையணி மற்றும் பொறிமுறை காலாட் படையணியில் பதவிநிலை கடமைகளையும் வகித்துள்ளார்.

ஊடக பணிப்பாளர் இதற்கு முன்பு இந்த பணிப்பகத்தில் மேஜர் தர பதவியில் கடமை வகித்த அதிகாரியாவார்.

மேலும் பணிப்பாளர் ஜெனரல் மற்றும் ஊடக பணிப்பாளராக கடமை வகித்த மேஜர் ஜெனரல் ரொஷான் செனெவிரத்ன அவர்கள் 51 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

1987 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12 ஆம் திகதி இராணுவ அதிகாரி பதவிக்கு நியமிக்கப்பட்டார்.

பிரிகேடியர் சுமித் அதபத்து இந்த பதவிக்கு வருவதற்கு முன்பு 58 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதியாக காலி பூஸ்ஸ பிரதேசத்தில் கடமை வகித்தார்.

மேலும் பொறிமுறை காலாற் படையணியின் படைத் தளபதியாகவும் மின்னேரியவில் அமைந்துள்ள காலாட் பயிற்சி மத்திய நிலையத்தின் கட்டளை அதிகாரியாகவும் கடமை வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like