மாமாவால் 15 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்!

தனது சொந்த மாமாவால் பாடசாலை மாணவியொருவர் பல முறை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் 58 வயதுடைய குறித்த நபர் நவகத்தேகமுவ காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, 15 வயது குறித்த பாடசாலை மாணவி 23 வயதுடைய நபரொருவரை காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில் , குறித்த சிறுமி துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகியிருப்பது அவரது பெற்றோருக்கு தெரியவந்துள்ளது.

அதனை தொடர்ந்து , அவரது பெற்றோர் குறித்த இளைஞர் மீது காவற்துறையில் முறைப்பாடு செய்ததை தொடர்ந்து இளைஞர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

பின்னர் , மாணவி புத்தளம் ஆதார மருத்துவமனையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இதன்போது , குறித்த மாணவி இதற்கு முன்னரும் பல முறை துஸ்பிரயோகத்திற்கு உள்ளானமை தெரியவந்துள்ளது.

கடந்த 2013ம் ஆண்டு அவரது மாமி வீட்டுக்கு படிக்க சென்றிருந்த போது அங்கு வைத்து அவரது மாமாவால் பல முறை தான் துஸ்பிரயோகத்திற்கு உள்ளானதாக குறித்த மாணவி தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து குறித்த நபர் காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் ஆனமடுவ நீதிமன்றில் முன்னிலைப்படுத்தபடவுள்ள நிலையில் , சம்பவம் தொடர்பில் நவகத்தேகம காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like