நாடளாவிய ரீதியில் களைகட்டிய அக்ஷய திருதியை!! நகைக்கடைகளில் நிரம்பி வழியும் மக்கள் கூட்டம்!!

தமிழர்களின் பண்பாடுகளில் ஒன்றான அக்ஷய திருதியை தினம் இன்று நாடளாவிய ரீதியில் கொண்டாடப்படுகின்றது.இன்றைய தினம் நகை வாங்கி அணிவதால் செல்வம் அதிகரிக்கும் என்பது மக்களின் நம்பிக்கையாகும்.இதை முன்னிட்டு இலங்கை முழுவதும் உள்ள நகைக்கடைகள் இன்று விழாக்கோலம் பூண்டுள்ளது.அந்த வகையில் மட்டக்களப்பு நகரில் உள்ள நகை விற்பனை நிலையங்களில் இன்று காலை முதல் பெருமளவான மக்கள் நகை கொள்வனவு செய்வதை காணக்கூடியதாக உள்ளது.

கல்முனையில் களைகட்டிய அக்ஷய திருதி

அக்ஷய திருதியை முன்னிட்டு இன்று கல்முனையிலுள்ள நகை மாளிகைகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.இன்றைய தினம் தங்கம் வாங்கினால் மேலும் தங்கம் சேரும் என்ற நம்பிக்கையில் மக்கள் நகைகடைகளை நோக்கி படையெடுக்கின்றனர். அந்த வகையில் கல்முனையிலும் நகை வியாபாரம் சிறப்பாக நடைபெற்றுள்ளது.

வாழைச்சேனையில் அக்ஷய திருதியை கொண்டாட்டம்

அக்ஷய திருதியை முன்னிட்டு இன்று நாடளாவிய ரீதியில் நகைகள் கொள்வனவுசெய்யும் நிகழ்வு இடம்பெற்று வருகின்றது. அந்த வகையில் வாழைச்சேனை பிரதேசத்திலுள்ள நகை வியாபார நிலையங்களில் பெண்கள் முதல் ஆண்கள் வரை நகை கொள்வனவு செய்யும் நடவடிக்கையில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். நகை வியாபார நிலையங்களில் நகை கொள்வனவு செய்பவர்களுக்கு வியாபார நிலையத்தினால் நினைவுப் பொருட்களும் வழங்கி வைக்கப்படுகின்றது.

மலையகத்தில் அக்ஷய திருதியைஅக்ஷய திருதியை தினமான இன்று ஹட்டன் நகர் முழுவதும் நகைக்கடைகளில் மக்கள் கூட்டம் நிரம்பி காணப்பட்டது.

சித்திரை வளர்பிறை காலத்தில் வரும் திருதியை ‘அக்ஷய திருதியை’ என்று அழைக்கப்படுகிறது.அக்ஷயா என்ற சொல்லுக்கு சமஸ்கிருதத்தில் ‘எப்போதும் குறையாது’ என்பது அர்த்தம். இந்த நாள் நல்ல அதிஷ்டத்தையும், வெற்றியையும் தரும் என்று நம்பப்படுகிறது.

குறிப்பாக, தங்கம், வெள்ளி அவற்றினால் செய்யப்பட்ட நகைகள், வைரம் மற்றும் இதரவிலை மதிப்பற்ற கற்கள் மற்றும் வீடு, மனை போன்றவற்றை வாங்க உகந்த நாளாகவும் கருதப்படுகிறது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like