புலிக்கொடியுடன் அதிர்ந்த சென்னை ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி!! (வீடியோ)

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பல எதிர்ப்புக்களுக்கு மத்தியில் நேற்று (10) நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட தமிழர்கள் சிலரின் செயல் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

காவிரி விவகாரம் குறித்து தமிழகத்தில் போராட்டங்கள் வெடித்துள்ள. இதனால் அப்பகுதியெங்கும் பரபரப்பான ஒரு நிலை காணப்பட்டது.

இந்நிலையில் ஐபிஎல் போட்டியை காண மைதானத்திற்குள் சென்ற சிலர் புலிக்கொடியுடன், ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிக்கு எதிராக கோஷம் எழுப்பியுள்ளனர்.

இந்த சம்பவம் தற்போது வீடியோவாக வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Get real time updates directly on you device, subscribe now.