வன்னி காட்டுப் பகுதியில் முதிரை மரங்களை கைப்பற்றப்பட்டுள்ளது. (வீடியோ)

வன்னி காட்டுப் பகுதியில் தறிக்கப்பட்டு சட்டவிரோதமான முறையில் கருங்கலுக்குள் மறைத்து கொண்டு வரப்பட்ட முதிரை மரங்களை கைப்பற்றப்பட்டுள்ளதாக கொடிகாமம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எதிரசிங்க தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் கொடிகாமம் பொலிஸ் பிரிவின் புலனாய்வு பொலிஸாருக்கு சட்டவிரோத மரங்கள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வேண்டுகோளுக்கிணங்க மேற்கொண்ட நடவடிக்கையின் பயனாக இவ் முதிரை மரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

வன்னி காட்டுப்பகுதியில் இருந்து யாழ்பாணப் பகுதிக்கு கருங்கல்லினால் மறைத்துக் கொண்டுவரப்பட்ட நிலையில் ஏழு அடி மதிக்கத்தக்க முதிரை மரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இச் சந்தர்ப்பத்தில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மரங்களை ஏற்றி வந்த டிப்பர் வாகனத்தையும் கொடிகாமம் பொலிஸார் பிடித்துள்ளனர்.

இந் நடவடிக்கையில் கொடிகாமம் பொலிஸ் புலனாய்வுப் பிரிவின் கே.தினேஸ் அ.அஜந்தன் பிரதீப் சுரங்க என் விஜிதரன் ஆகியோர் இந் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.