வெட்டப்பட்ட நிலையில் 54 கைகள் மீட்பு

பனிக்கட்டிக்குள் இருந்து 54 வெட்டப்பட்ட கைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதாவது 27 ஜோடி கைகள் கண்டெடுக்கப்பட்டது.

ரஷ்யாவின் சீனா எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் ஆமூர் ஆறு கடும் குளிர் காரணமாக உறைந்து அதன் மீது பனிக்கட்டி படலங்கள் படர்ந்துள்ளன.

அப்போது அந்த பனிக்கட்டி படலத்தை கட்டுமான பணி ஒன்றிற்காக கடந்த 8 ஆம் திகதி கொஞ்சம் கொஞ்சமாக வெட்டி எடுத்துள்ளார்கள்.

அப்போது அங்கு ஒரு பை கண்டெடுக்கப்பட்டுள்ளது. அந்த பையிலேயே 54 வெட்டப்பட்ட கைகள் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் ஒரே ஒரு கையில் மட்டுமே கைரேகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த கைகள் யாருடையது? ஏன் வெட்டப்பட்டது? என்று இது வரை தெரியவில்லை.

அதேபோல் இந்த கைகளை வெட்டியது யார்? என்ற விவரமும் இதுவரை வெளியாகவில்லை. அது எந்த காலத்தில் வெட்டப்பட்டது? என்பதும் கண்டுபிடிக்கப்படவில்லை.

ஆனால் அவை வெட்டப்பட்டு 20 ஆண்டுகளுக்கும் குறைவாகவே இருக்கும் என நம்பப்படுகிறது.
வெகுவிரைவில் இந்த கைகள் குறித்த தகவல்கள் வெளியாகுமென தெரிவிக்கப்படுகிறது.

Get real time updates directly on you device, subscribe now.