கிராமத்து வீதியின் அவலத்தை வித்தியாசமாக வெளிக்காட்டிய பிரதேசவாசி

மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனை பிரதேச செயலகப்பிரிவில் பொது மக்களின் நெருக்கமான குடியிருப்பினை கொண்ட கிராமத்து வீதியின் மழை காலத்தில் ஏற்படும் நிலையினை இவ்வாறான ஒரு நடவடிக்கையின் மூலம் தமது ஆதங்கத்தினை வெளிக்காட்டினார் அப்பிரதேசத்தில் வாசியொருவர்.

வாழைச்சேனை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட யூனியன்கொளணி 4ம் குறுக்கு வீதியில் மழைகாலங்களில் நீர் நிரம்புவதனால் அப்பகுதி வாழ் மக்களின் அன்றாட போக்குவரத்துக்கு இடையூறுகள் விளைவிப்பதாகவும் அப்பகுதி மக்களும் பாடசாலை சென்றுவரும் மாணவர்களும் பெரும் சிரமத்துக்குள்ளாகுவதாக அங்குள்ள மக்கள் தெரிவிப்பதோடு, அரசியல் பிரமுகர்கள் தேர்தல் காலங்களில் மட்டுமே தங்களை நாடிவருவதாகவும் இப்படியான விடையங்களை சரிசெய்ய முனையவில்லை எனவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றர்கள்.

Get real time updates directly on you device, subscribe now.