ஆலயத் திரு­வி­ழா­வில்- 12 பவுண் நகை கொள்ளை!!

வவு­னி­யா­வில் உள்ள ஆல­யம் ஒன்­றின் தேர்த் திரு­வி­ழா­வில் கலந்து கொண்ட பக்­தர்­க­ளின் சுமார் 12 பவுண் தங்க நகை­கள் கொள்­ளை­ய­டிக்­கப்­பட்ட சம்­ப­வம் ஒன்று நேற்று நடந்­துள்ளது.

அன்­ன­தா­னத்­தில் கலந்து கொண்­ட­ போதே நகை­களை இழந்­தமை தெரி­ய­வந்­தது.

வவு­னியா குரு­மன்­காடு சந்­தி­யி­லுள்ள ஆல­யத்­தின் தேர்­தி­ரு­விழா நேற்­றுக் காலை இடம்­பெற்­றது.

இதில் அதி­க­ள­வான மக்­கள் கலந்து கொண்­ட­னர். அதைச் சாத­க­மா­கப் பயன்­ப­டுத்­திய கொள்­ளை­யர்­கள் தமது கைவ­ரி­சை­யைக்­காட்­டி­யுள்­ள­னர். 5 பேர் அணிந்­தி­ருந்த தங்க நகை­கள் கொள்­ளை­ய­டிக்­கப்­பட்­டுள்­ளன என்று தெரி­விக்­கப்­பட்­டது.

அன்­ன­தா­னம் இடம்­பெ­றும்­ போதே நகை­க­ளைப் பறி­கொ­டுத்­த­வர்­க­ளுக்­குத் தமது நகை­கள் கொள்­ளை­ய­டிக்­கப்­பட்­டமை தெரி­ய­வந்­தது. ஆலய பரி­பா­ல­ன­ச­பை­யி­ன­ரி­டம் தெரி­யப்­ப­டுத்­தப்­பட்­டது.

நான்கு பவுண் நகை­யைப் பறி­கொ­டுத்த பெண் ஒரு­வர்­பொ­லிஸ் நிலை­யத்­தில் முறை­யிட்­டுள்­ளார். ஜந்து பேரின் நகை­க­ளும் 12பவுண் பெறு­ம­தி­யா­னவை என மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இது தொடர்­பான மேல­திக விசா­ர­ண­களை பொலி­ஸார் மேற்­கொண்­டுள்­ள­னர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like