காலவரையறையின்றி இடைநிறுத்தப்பட்ட கிழக்குப் பல்கலைக்கழகம்!

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடத்தின் கல்வி நடவடிக்கைகள் வெள்ளிக்கிழமை மாலை முதல் காலவரையறையின்றி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கிழக்குப் பல்கலைக்கழக பதில் பதிவாளர் அமரசிங்கம் பகிரதன் தெரிவித்துள்ளார்.

சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த அனைத்து மாணவர்களையும் நேற்று மாலை 6 மணிக்கு முன்பு வளாகத்தினை விட்டு வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பீடத்தைச் சேர்ந்த மாணவர்கள் சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகம், வந்தாறுமூலை வளாகம், திருகோணமலை வளாகம், அகியவற்றுக்குள் நுழைவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like