“ஆவா” VS “தனுரொக்” யாழ்ப்பாணத்தில்!

யாழ்ப்பாணத்தில் “ஆவா” குழுவை மீறி “தனுரொக்” என்ற குழு தலைத்தூக்க முயற்சித்து வருவதாக யாழ்ப்பாணத்தில் உள்ள புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆவா குழுவில் இருந்த பிரிந்து சென்ற சிலர் இணைந்தே தனுரொக் என்ற குழுவை உருவாக்கியுள்ளதாகவும் கொக்குவில் காவற்துறையினர் இந்த குழுவை சேர்ந்த மூன்று பேரை கைதுசெய்த பின்னர் நடத்திய விசாரணைகளில் இந்த குழு குறித்து பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொக்குவில் மேற்கு பகுதியில் கடந்த ஞாற்றுக்கிழமை முன்தினம் மதியம் தனுரொக் குழுவினர் இரண்டு இளைஞர்களை தாக்கியதால், அவர்களட காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்குதல் நடத்தியவர்களில் மூன்று பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர், கொக்குவில் மேற்கு அருகல்மடம் பகுதியில் இந்த தாக்குதல் நடத்தியுள்ளதுடன் வீதியில் சென்ற மேலும் இரண்டு பேரையும் தாக்கியுள்ளனர்.

சம்பவம் நடைபெற்ற நேரத்தில் யாழ்ப்பாண காவற்துறையினர் சிலர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்ததுடன் தாக்குதல் நடத்திய மூன்று பேரை கைதுசெய்ததுடன் மோட்டார் சைக்கிள் ஒன்றையும் கைப்பற்றியுள்ளனர். சம்பவத்தில் காயமடைந்த அருகல்மடம் பகுதியை சேர்ந்த பாலசிங்கம் பகிதரன், இராசைய்யா தனுஜன் ஆகியோர் யாழ் போதனா வைத்தியசாலையின் 24 விடுதியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.