திரு­வி­ழா­வில் நகை திருட்டு- 8 பேர் கொண்ட கும்­பல் கைது!!

ஒட்­டு­சுட்­டான் தான்­தோன்­றீஸ்­வ­ரர் ஆல­யத் தேர்­த்திரு­விழா நேற்று நடை­பெற்­றது. அதில் நான்கு தங்­கச் சங்­கி­லி­கள், தாலிக்­கொடி என்­பன திருடப்­பட்­டுள்­ளன என்று ஒட்­டு­சுட்­டான் பொலி­ஸில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

விசா­ர­ணை ­களை மேற்­கொண்ட பொலி­ஸார் வெளி­மா­வட்­டங்­க­ளைச் சேர்ந்த எட்­டுப் பேரைக் கைது செய்­த­னர்.

தேர்த்­தி­ரு­வி­ழா­வில் அதி­க­ள­வான பக்­தர்­கள் கலந்­து­கொண்­ட­னர். அதைப் பயன்­ப­டுத்தி கொள்­ளை­யர்­கள் தங்­க­ளது கைவ­ரி­சை­யைக் காட்­டி­யுள்­ள­னர்.

விழிப்­ப­டைந்த மக்­கள் திரு­வி­ழா­வில் பாது­காப்­புக் கட­மை­யில் ஈட­பட்­டி­ருந்த பொலி­ஸா­ருக்கு தக­வல் வழங்­கி­னர்.

சந்­தே­கத்­தின் பேரில் வெளி­மா­வட்­டத்­தைச் சேர்ந்த 8 பேர் கைது செய்­யப்­பட்­ட­னர். கைது செய்­யப்­பட்­ட­வர்­க­ளில் பெண்­கள், சிறு­வர்­கள், முதி­ய­வர்­கள் அடங்­கு­கின்­ற­னர் என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like