இலங்கை பெண்ணுடன் காதல் திருமணம் : குழந்தைகளுடன் வீட்டில் அழுகிய நிலையில் கிடந்த கணவர்!!

தமிழகத்தில் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டல் தனியாக பிரித்து வாழ்ந்து வந்த கணவர் இரு மகன்களுக்கும் விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மதுரவாயில் பகுதியை அடுத்த ஆலப்பாக்கம் காமதேனு நகரில் வசித்து வருபவர் அபிப்ரகுமான். 38 வயதான இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அனிஷா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார்.

இவர்களுக்கு முகமது நாயிப்(6), ரயான்(3) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். ஆலப்பாக்கத்தில் கடந்து இரண்டு ஆண்டுகளாக வசித்து வந்த நிலையில், சமீபத்தில் இருவருக்கும் மனக் கசப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் அனிஷா இலங்கையில் உள்ள தன்னுடைய தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். மனைவி பிரிந்து சென்ற துக்கத்தில் அபிப்ரகுமான், தன்னுடைய இரண்டு மகன்களுடன் தனித்து வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் இவர்கள் வசித்து வந்த வீட்டில் துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் அக்கம்பக்கத்தினர் அவர்கள் வீட்டின் ஜன்னல் வழியாக உள்ளே பார்த்த போது, ரகுமான் மற்றும் அவரது இரண்டு மகன்களும் அழுகிய நிலையில் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் மூன்று உடல்களையும் கைப்பற்றி சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் பொலிசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மனைவி பிரிந்து சென்ற வருத்ததில் இருந்த ரகுமான் மன உளைச்சலில் இருந்ததாகவும், அவ்வப்போது சென்னை வரும் ரகுமானின் மனைவி அனிஷா அவரது பிள்ளைகளை சந்தித்து சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

வழக்கம்போல் பிள்ளைகளை சந்திக்க வரும் அனிஷா கடந்த வாரம் சந்திக்க வராத காரணத்தினால், மனமுடைந்த ரகுமான் இரு பிள்ளைகளையும் விஷம் கொடுத்து கொலை செய்து விட்டு தானும் விஷம் அருந்தி தற்கொலைச் செய்து கொண்டதாக தெரியவந்துள்ளது.

இருப்பினும் வேறு ஏதும் காரணம் உள்ளதா என்ற கோணத்திலும் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like