ஆவா குழுவின் முன்னாள் உறுப்பினரின் கையை அறுத்து துண்டித்த ஆவா குழு

மானிப்பாயில் இன்று காலை இடம்பெற்ற வாள்வெட்டுக் கும்பலின் மற்றொரு தாக்குதலில் இளைஞர் மற்றும் அவரது சகோதரி என இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மானிப்பாய் லோட்டன் வீதியில் இந்துக் கல்லூரிக்கு முன்பாகவுள்ள வீடொன்றுக்குள் புகுந்த 10 பேர் கொண்ட வாள்வெட்டுக் கும்பல், பெற்றோல் குண்டுத் தாக்குதலை மேற்கொண்டவுடன், வீட்டின் குடும்பத்தலைவருக்கு வாளால் வெட்டியது.

குடும்பத்தலைவரின் மகன் தனு ரொக் என அழைக்கப்படுவரை அச்சுறுத்தும் வகையிலேயே இந்த தாக்குதல்மேற்கொள்ளப்பட்டது. அதனையடுத்து மற்றொரு வீட்டுக்குள் புகுந்து இளைஞன் ஒருவரை வாளால் வெட்டி காயப்படுத்திவிட்டு அந்தக் கும்பல் தப்பித்தது.

ஆவா குழுவின் முன்னாள் உறுப்பினராக இருந்து தற்போது திருந்தி பழக்கடை ஒன்றில் வேலைசெய்துவந்த டயஸ் (வயது 19) என்ற இளைஞனே இவ்வாறு வாள் வெட்டுக்கு இலக்காகி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இளைஞனை வெட்டும்போது அவரது அக்காவான டிவிசா (வயது 21) என்பவர் குறுக்கே சென்றதால் அவரது கையிலும் படுகாயமைடந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

வெட்டியவர்கள் ஆவா குறுப்பை சேர்ந்தவர்களான அசோக், மதன்ராஜ் உள்ளிட்ட பத்து பேர் என பொலிஸுக்கு முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.
படுகாயத்திற்குள்ளான இளைஞனின் கை துண்டாடப்பட்டுள்ளது. .அத்துடன் இளைஞனின் நெஞ்சு, முதுகு பகுதிகளிலும் வெட்டுக்காயங்கள், கொத்துக்காயங்கள் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டது.

Get real time updates directly on you device, subscribe now.