பொய் சொன்­னார் விக்கி சபை­யில் குற்­றச்­சாட்டு

வடக்கு மாகாண சபை­யின் முத­ல­மைச்­ச­ரும் முன்­னாள் நீதி­ய­ர­ச­ரு­மான சி.வி.விக்­னேஸ்­வ­ரன் இரண்டு விவ­கா­ரங்­க­ளில் பொய்­யு­ரைத்­துள்­ளார் என்று உறுப்­பி­னர்­கள் பலர் சபை­யில் நேற்­றுப் பகி­ரங்­க­மா­கக் குற்­றம் சுமத்­தி­னர்.

கடந்த 10ஆம் திகதி நடை­பெற்ற அமர்­வில் டெனீஸ்­வ­ரன் விவ­கா­ரம் தொடர்­பில் விளக்­க­வுரை ஒன்றை முத­ல­மைச்­சர் நிகழ்த்­தி­னார். மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத்­தின் இடைக்­கா­லக் கட்­ட­ளைக்கு அமை­வா­கத் தன்­னால் அமைச்­சர் ஒரு­வரை நிய­மிக்­கவோ நீக்­கவோ முடி­யாது என்று குறிப்­பிட்­டி­ருந்­தார்.
முத­ல­மைச்­சர் இவ்­வாறு குறிப்­பிட்­டது தவறு என்று ஆளும் மற்­றும் எதிர்­கட்சி உறுப்­பி­னர்­கள் நேற்­றுச் சுட்­டிக்­காட்­டி­னர். நீதி­மன்­றத் தீர்ப்பை திரி­பு­ப­டுத்தி முத­ல­மைச்­சர் பொய்­யு­ரைத்து சபையை தவ­றாக வழி­ந­டத்­தி­யுள்­ளார் என்று தெரி­வித்­த­னர்.

அர­ச­மைப்­பின் 154 எப்(5) இற்கு அமை­வாக, அமைச்­சர்­க­ளைப் பரிந்­து­ரைக்­கும் அதி­கா­ரம் முத­ல­மைச்­ச­ருக்கே உண்டு என­வும், அது நீதி­மன்­றத் தீர்ப்­பி­னால் பறிக்­கப்­ப­ட­வில்லை என­வும் அவர்­கள் தெரி­வித்­த­னர்.

வடக்கு மாகாண ஆளு­நர் அமைச்­ச­ர­வை­யின் விவ­ரத்தை தரு­மாறு கோரி கடி­தம் அனுப்­பி­னாரா என்ற கேள்­விக்கு, இல்லை என்று முத­ல­மைச்­சர் அதே அமர்­வில் பதி­ல­ளித்­தி­ருந்­தார்.

வடக்கு மாகாண ஆளு­நர் 5ஆம் திகதி எழு­திய கடி­தத்­துக்கு முத­ல­மைச்­சர் 6ஆம் திகதி பதில் அனுப்­பி­யி­ருந்­த­மை­யும், 6ஆம் திகதி ஆளு­நர் எழு­திய கடி­தத்­துக்கு முத­ல­மைச்­சர் 11ஆம் திகதி பதில் அனுப்­பி­யி­ருந்­த­மை­யும் ஆதா­ரங்­க­ளு­டன் நேற்று சபை உறுப்­பி­னர்­க­ளால் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டன.

இந்த விட­யத்­தில் முத­ல­மைச்­சர் பொய்­யு­ரைத்து மக்­களை முட்­டாள் ஆக்­கி­விட்­டார் என்­றும் உறுப்­பி­னர்­கள் கடு­மை­யா­கச் சாடி­னார்­கள்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like