சற்று முன்னர் பிரதமர் அலுவலகத்திற்கு அருகில் வெடிப்பு சம்பவம்!

கொழும்பு – புளவர் வீதிப்பகுதியில் அமைந்துள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ அலுவலகத்துக்கு அருகில் அமைந்துள்ள பகுதியில் சற்று முன்னர் வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த பகுதியில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு நடவடிக்கை ஒன்றின்போதே இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் கூறியுள்ளார்.

பெக்கோ இயந்திரத்தின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணியின் போது, பெக்கோ இயந்திரம் நிலத்திற்கு கீழ் இருந்த உயர் மின் அழுத்த கம்பியுடன் மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்தே குறித்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ள. இதில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இந்நிலையில், சம்பவம் குறித்த விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like