செம்­மணி புதை­குழி விவ­கா­ரம் -பொலி­ஸார் ஒத்­து­ழைப்­பில்லை -அகழ்­வுப் பணி­கள் தாம­தம்!!

செம்­ம­ணி­யில் எலும்­புக்­கூட்டு எச்­சங்­கள் கண்­டு­பி­டிக்­கப்­பட்ட பிர­தே­சத்­தில் பரி­சோ­த­னை­கள் மேற்­கொள்­வ­தற்­காக யாழ்ப்­பா­ணம் போதனா மருத்துவ மனை­யின் சட்ட மருத்துவ அதி­காரி நேற்­றுப் பிர­சன்­ன­மா­னார். பொலிஸ் குற்­றத் தடுப்­புப் பிரி­வின் பொறுப் ப­தி­காரி சம்­பவ இடத்துக்கு வருகை தர­வில்லை. மேல­திகஅகழ்­வுப் பணி­க­ளும் பரி­சோ­த­னை­க­ளும் ஒத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ளன.

நீர்த்­தாங்கி அமைப்­ப­தற்­காக செம்­ம­ணி­யில் கடந்த வெள்­ளிக் கிழமை நிலம் அக­ழப்­பட்­டது. மனித எலும்­புக்­கூட்டு எச்­சங்­கள் வெளித்­தெ­ரிந்­தன. அகழ்­வுப் பணி­கள் உட­ன­டி­யாக நிறுத்­தப்­பட்­டது. யாழ்ப்­பா­ணம் பொலி­ஸா­ருக்கு அறி­விக்­கப்­பட்­டது. சம்­பவ இடத்தை யாழ்ப்­பாண மாவட்ட நீதி­வான் சதீஸ்­க­ரன் நேற்­று­முன்­தி­னம் மாலை நேரில் சென்று பார்­வை­யிட்­டார்.

எலும்­புக்­கூட்­டின் எஞ்­சிய எச்­சங்­கள், அக­ழப்­பட்ட மண்­ணு­டன் கொண்டு செல்­லப்­பட்­டி­ருக்­க­லாம் என்ற அடிப்­ப­டை­யில், அக­ழப்­பட்ட மண்­ணைப் பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்த உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டி­ருந்­தது. சட்ட வைத்­திய அதி­காரி சம்­பவ இடத்­தைப் பார்­வை­யிட்ட பின்­னரே எஞ்­சிய நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க முடி­யும் என்­றும் கூறப்­பட்­டி­ருந்­தது.

யாழ்ப்­பா­ணம் போதனா வைத்­தி­ய­சா­லை­யில் சட்ட வைத்­திய அதி­காரி க.மயூ­ர­தன், நேற்­றுக் காலை 11 மணிக்கு மனித எலும்­புக்­கூட்டு எச்­சங்­கள் கண்­டு­பி­டிக்­கப்­பட்ட பகு­திக்­குச் சென்­றார். தட­ய­வி­யல் (சோக்கோ) பொலி­ஸா­ரும், பொலிஸ் குற்­றத் தடுப்­புப் பிரி­வின் இரண்டு பொலிஸ் அலு­வ­லர்­க­ளுமே அங்கு முன்­னி­லை­யா­கி­யி­ருந்­த­னர்.

பொலிஸ் குற்­றத் தடுப்­புப் பிரி­வின் பொறுப்­ப­தி­காரி சம்­ப­வட இடத்­துக்கு வர­வில்லை. அங்கு அகழ்­வுப் பணி­களை மேற்­கொள்­வ­தற்­கு­ரிய உப­க­ர­ணங்­க­ளும் ஒழுங்கு செய்­யப்­பட்­டி­ருக்­க­வில்லை. சட்ட வைத்­திய அதி­காரி தலை­மை­யி­லான குழு­வி­னர் அகழ்­வுப் பணியை ஒத்­தி­வைத்து விட்­டுத் திரும்­பிச் சென்­ற­னர்.

நீதி­மன்­றத்­தின் ஊடாக, அகழ்­வுப் பணியை நேர்­தி­யாக முன்­னெ­டுப்­ப­தற்­கு­ரிய ஒழுங்­கு­க­ளுக்கு கோரிக்கை விடுக்­கப்­ப­ட­வுள்­ளது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like