புலிகளால் அமைக்கப்பட்ட -பெரிய பதுங்குகுழி அழிப்பு!!

சுகா­தா­ரப் பிரி­வி­ன­ரின் சிபாரி­சைத் தொடர்ந்து பிர­தேச சபை­யில் எடுத்­துக் கொள்­ளப்­பட்ட தீர்­மா­னத் துக்க­மைய பெரும் பதுங்­கு­குழி கன­ரக வாக­னங்­க­ளின் உத­வி­யு­டன் அழிக்­கப்­பட்­டுள்­ளது.

வலி.தென் மேற்கு பிர­தேச ­ மானிப்­பாய் பட்­டி­னத்­தில் செல்­ல­முத்து விளை­யாட்டு மைதா­னத்­தின் தெற்­குப் பக்­க­மாக அமைந்­துள்ள திறந்த வௌிய­ரங்­கிற்கு பின்­பு­ற­மாக விடு­த­லைப் புலி­க­ளால் பெரும் பதுங்­கு­குழி அமைக்­கப்­பட்­டி­ருந்­தது.

மழை காலங்­க­ளில் இப் பதுங்­கு­கு­ழிக்­குள் வௌ்ளம் தேங்கி நிற்­ப­த­னால் நுளம்­பு­கள் உற்­பத்­தி­யா­வ­து­டன் துர்­நாற்­ற­மும் வீசி­வந்­தது.

இந்த நிலை குறித்து சுற்­றா­ட­லில் வசிக்­கும் மக்­கள் சுகா­ தா­ரப் பிரி­வி­ன­ருக்கு முறை­யிட்­ட­மை­யை­ய­டுத்து பதுங்­கு­கு­ழியை நேரில் சென்று பார்­வை­யிட்ட சுகா­தா­ரப் பிரி­வி­னர் பதுங்­கு­கு­ழியை அழிக்­க­வேண்­டிய அவ­சி­யம் குறித்து பிர­தேச சபைக்கு சிபா­ரிசு செய்­தி­ருந்­த­னர்.

சுகா­தா­ரப் பிரி­வி­ன­ரின் அறி­வு­றுத்­த­லைத் தொடர்ந்து பிர­தேச சபை­யில் எடுத்­துக் கொள்­ளப்­பட்ட தீர்­மா­ னத்துக்கு அமைய நேற்று முன்தினம் ஞாயிற்­றுக்­கிழமை பெரிய வாக­னங்­க­ளின் உத­வி­யு­டன் பதுங்­கு­குழி அழிக்­கப்­பட்­டது.

பதுங்­கு­கு­ழி­யி­லி­ருந்து மீட்­கப்­பட்ட பெரும் இரும்­புப் கேடர்­கள் இப்­பி­ர­தே­சத்­தி­லுள்ள மயா­னங்­க­ளின் அபி­வி­ருத்தி வேலைக்­குப் பயன்­ப­டுத்­தப்­ப­டு­மென்று தவி­சா­ளர் அ.ஜெப­நே­சன் தெரி­வித்­துள்­ளார்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like